ஆவடி, ஏப். 09 –
தமிழக அரசு விதித்துள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே திருவள்ளூர் மாவட்ட மேற்கு பாஜக மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் பாஜக மாநிலத் தலைவர் உத்திரவின் பேரில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டக் கண்டன கூட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் முறையில் திமுக அரசு நடந்து வருவதையும், தற்போது சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தியதை கண்டித்தும் மேலும் பல்வேறு பிரச்சினைகளைகள் குறித்து இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆவடி பட்டாபிராம் திருநின்றவூர் கோவர்த்தனகிரி பூந்தமல்லி போன்ற பல்வேறு பகுதியிலிருந்து பாஜக தொண்டர்கள் வருகைப் புரிந்திருந்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் மாநில ஓபிசி அணி தலைவர் லோகநாதன் மாவட்ட செயலாளர்கள் எஸ் கே எஸ் மூர்த்தி பொதுச் செயலாளர் கருணாகரன் அஸ்வின் லயன் சீனிவாசன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.





















