கும்மிடிப்பூண்டி, ஏப். 08 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் உள்ள அமிர்தமங்கலம் திடீர் நகரில் தனியார் தொழிற்சாலையான சென்னை ஜெ.ஆர்.மெட்டல் குழுமத்தின் புதிய ஸ்பான்ச் அயன் உற்பத்தி ஆலை அமைக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைப் பெற்றது.

இக்கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பூவலம்பேடு ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் இதனால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை தெரிவித்து தொழிற்சாலை அமைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கருத்துகளை பதிவு செய்து பதிவுகளை மத்திய அரசுக்கு அனுப்புவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பூவலம்பேடு வக்கீல் வெங்கடாஜலபதி பேசினார்.

அப்பொழுது அவர் பேசியதாவது;

மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த திட்டத்திற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்க மாட்டார். பொதுமக்களின் ஒப்புதலுக்கு பின்னரே எந்த ஒரு திட்டமும் தமிழக அரசு செயல்படுத்தும் எனவே மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் நானும் ஏற்க மாட்டேன். இந்த தொழிற்சாலை அமைக்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை எதிர்ப்புதான் தெரிவிக்கிறார்கள் மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இந்த தொழிற்சாலை அமைய வாய்ப்புள்ளது என தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்டவருவாய்துறை அதிகாரி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி காமராஜ், திட்ட அதிகாரி, கும்மிடிப்பூண்டி ஊராட்சிஒன்றிய ஆணையாளர் வாசுதேவன், வட்டாட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here