கும்பகோணம், ஏப். 04 –
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைப்பெற்றது.
இவ்விழா மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சமுதாய வளைகாப்பு விழாவை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் குழந்தை வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் வெற்றிவேல் திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் கோ.க அண்ணாதுரை பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின் சிதம்பரநாதப்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், நகரம் மற்றும் ஊரக வட்டாரங்களில் இருந்து இவ்விழாவல் சுமார் 100 மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, மங்கலப் பொருட்களான வளையல், மங்கலநாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை மற்றும் காப்பரிசி, கடலைமிட்டாய், வேப்பம் காப்பு, பூமாலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்து அக்கர்ப்பிணி பெண்களுக்கு மதிய உணவாக எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல் ஐந்து வகை சுவை கொண்ட உணவு வழங்கப்பட்டது. மேலும், புதினா துவையல், ஊறுகாய், சிப்ஸ், அரிசி வடகம் வழங்கப்பட்டன.




















