அணைகட்டு, ஏப். 02 –

வேலூர் மாவட்டம் அணைகட்டு வட்டம் இலவம்பாடி ஊராட்சி கிராமத்தில் உள்ள குட்டை ஏரியின் கரையோரம் அமைந்துள்ள ஆழ்துளை குடிநீர் தொட்டி சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இக் கிராமத்திற்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் குடி நீர் வழங்கி வருகிறது.

இந்த ஆழ்துளை தொட்டியில் இருந்து மின் மோட்டார் பயன் படுத்தி நீர் இரைத்து குடங்களில் பொதுமக்கள் பிடித்து சென்று பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல வாரங்களாக மின் இயக்கி பழுதடைந்ததினால் நேரடியாக இயக்க பீஸ் கேரியர் போட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் முதியோர் குழைந்தைகள் மற்றும் பெண்கள் இயக்க முடியாத சூழ் நிலைவுள்ளது.

இப்பிரச்சினைக் குறித்து குடிநீர் பயன்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் என பல முறை ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்புகார் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு குடிநீர் தொட்டியின் மின் இயக்கிகளை சரி செய்து ஏற்கனவே எளிமையாக அனைவரும் இயக்கும் வகையில் இருந்ததை போல் அமைக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் Amb Dr. M ராஜ்பாபு பானுநந்தினி மாவட்ட பொதுச் செயலாளர் மனித உரிமை செல் அமைப்பின் சார்பாகவும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here