முகப்பேர், மார்ச். 21 –
சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியு.ஆர்.ஏ. சமூக அறக்கட்டளை இஸ்லாமிய நூலகமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.
முகாமிற்கு இஸ்லாமிய நூலகம் ரஸ்வி. நஸ்ருல்லா தலைமை வகித்தனர். சங்கர நேத்ராலயா ஐ கேர் கிளினிக் மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர் முகாமில் 174 நபர்கள் பங்குபெற்றனர். அவர்களுக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளான பார்வை குறைபாடு. கிட்டப்பார்வை. தூரப்பார்வை .கண்களில் தண்ணீர் வடிதல். உள்ளிட்டவைகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்ய மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இதில் கண்களில் புரை நீக்குதல் .அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு 54 மருத்துவ பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக மருத்துவமனையின் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.




















