வில்லிவாக்கம், மார்ச். 11 –
சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி ரோட்டில் பட்டபகலில் நடந்த கொலை சம்பவத்தில் எதிர் தரப்பு ரவுடிகளால் வெட்டிக்கொல்லப்பட்ட பாலையா என்பவரின் மகனான ரவுடி ரஞ்சித்குமார் என்ற டபுள் வயது 22 பாரதிநகர் 2 வது தெருவில் வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் , கொலைமுயற்சி வழக்குகள் உட்பட ஆக மொத்தம் ஏழு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.
இந்நிலையில் வில்லிவாக்கம் பகுதியில் யார் பெரிய ரவுடி என்ற பிரச்சினை தொடர்பாக ரஞ்சித்குமார் கூட்டாளிகள் . சதீஷ் குமார் . ஜானகி ராமன் , ஐயப்பன் , மணிகன்டன் ( எ ) பிரவுன் மணி , கார்த்திக் ( எ ) புல்லட் கார்த்திக் , ஆகியோர்களுக்கும், அவர்களுக்கு எதிர்தரப்பினரான செல்வம் ( எ ) சொட்ட செல்வம் . கார்த்தி ( எ ) காட்டான் கார்த்தி , உதயா ( எ ) உதயகுமார் , ராதா ( எ ) ராதகிருஷ்ணன் , சீனு ( எ ) சீனிவாசன் , ஜெயகாந்தன் , தினேஷ் ( எ ) தினேஷ்குமார் , பத்மநாபன் , குள்ளா ( எ ) விமல்குமார் . ஆகியோர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில்
கடந்த 09.03.2022 ஆம் தேதி டபுள் ( எ ) ரஞ்சித்குமார், செல்வம் ( எ ) சொட்ட செல்வத்தை தாக்கியதில் வலது கை தோள்பட்டையில் பலத்த அடியும் , இடது கையில் சிறிய காயம் ஏற்படுத்தியுள்ளார் , அதனால் முன்விரோதம் அடைந்த சொட்ட செல்வத்தின் கூட்டாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி திட்டம் தீட்டி ரஞ்சித்குமார் ( எ ) டபுளை தாக்க காட்டான் கார்த்தி , உதயா , சீனு ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து கொண்டு நேற்று 10.03.2022 ஆம் தேதி மாலை 17.45 மணியளவில் ரஞ்சித்குமார் ( எ ) டபுளை தாக்க முற்பட்ட போது டபுளின் கூட்டாளிகள் உடன் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் , சதிஷ்குமார் மட்டும் தலையில் அடிபட்டு அரசு கே.எம.சி மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் டபுள் ( எ ) ரஞ்சித்குமார் மட்டும் எதிரிகளிடம் தனிமையில் மாட்டிக்கொண்டதால் வெட்டிகொலை செய்துள்ளார்கள்.
இது சம்மந்தமாக வி 1 வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் டபுள் எ ரஞ்சித்குமாரின் தாயார் திருமதி.நாகம்மாள் என்பவரின் புகாரின் அடிப்படையில் வி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரிகள் செல்வம் ( எ ) சொட்ட செல்வம் , கார்த்தி ( எ ) காட்டான் கார்த்தி , உதயா ( எ ) உதயகுமார் , சீனு ( எ ) சீனிவாசன் . ஜெயகாந்தன் , தினேஷ் ( எ ) தினேஷ்குமார் , பத்மநாபன் , குள்ளா ( எ ) விமல்குமார் . ஆகியோர்களை ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையாளர் தலைமையில் , துணை ஆணையாளர் அறிவுரையின் பேரில் கைது செய்துள்ளனர். மேலும், மற்றொரு எதிரியான ராதா ( எ ) ராதகிருஷ்ணன் மட்டும் தலைமறைவாக உள்ளார் . மேலும் சொட்ட செல்வம் என்பவரின் புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





















