காஞ்சிபுரம், மார்ச். 10 –

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிகளில் நான்கு மாநிலத்தில் பா.ஜ.க முன்னணி பெற்று வருகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரத்தில் பா.ஜ.கவினர் ஆரவாரமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகான்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் தொடர்ந்து வெளியாகி வருகின்றது

அதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற உத்திரபிதேசம், உத்தரகான்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கப்படவுள்ளது.

இதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழக்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here