முத்தாப்பேட்டை, மார்ச், 07 –   

ஆவடி காவல்துறை ஆணையரக பகுதிக்குட்பட்ட முத்தாப்பேட்டை காவல் நிலைய சரக எல்லையான மிட்டனமல்லியின் வண்டலூர் – மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைப்பெற்று வருகிறது.

  இதுக் குறித்து காவல்நிலையத்திற்கு வந்த புகாரினைத் தொடந்து, அதனை தடுக்கும் விதமாக T8 முத்தாப்பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், மற்றும் காவலர்கள் கலைவாணன், பாலமுரளி, பிரவீன் ஆகியோர் அடங்கிய குழு இரவு நேர ரோந்துப் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். மற்றும் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனச் சோதனையும் நடத்தி வருகின்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here