செங்கல்பட்டு, மார்ச். 06 –

செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு பகுதியில் ஜூனியர் குப்பண்ணா 52வது கிளை புதிய விற்பனை நிலையத்தை  ஜீனியர் குப்பண்ணா நிறுவனர் குடும்பத்தின் பாரம்பரியத்தைச் சுமந்து வரும்  மூர்த்தி மற்றும் ஆறுமுகம் முன்னிலையில் கூட்டாகத் திறந்து வைத்தனர்.

  இந்நிகழ்வில் செங்கல்பட்டு ஏ.எஸ்.பி. ஆதர்ஷ் பச்சேரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செங்கல்பட்டு மூத்த வழக்கறிஞர் எம்.பி. வெங்கடபெருமாள் முதல் விற்பனையை துவங்கி வைத்தார்.  தென்னிந்திய சிறப்பு உணவகம் நகர்ப்புற உணவகங்களுக்கு ஏற்றவாறு ஸ்மார்ட் டைனிங் கான்செப்ட் அவுட்லெட்டுகளாக பரிணமித்துள்ளது. மற்றும் அவை அனைத்தும் குடும்பத்துடன் இயக்கப்படும் கடைகள் ஆகும்.

  கடந்த 3 ஆண்டுகளாக மறைமலை நகர் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது புதியதாக துவங்கப்பட்டுள்ள  செங்கல்பட்டு கிளையும் மாபெரும் வெற்றி பெறும் என்று உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கொங்கு நாட்டின் சிறந்த அசைவப் பரவல், இப்போது செங்கல்பட்டில் துவங்கி உள்ளது. மேற்கில் நீலகிரி மற்றும் கிழக்கில் நவீன கரூர் மாவட்டத்தின் சிறிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள கொங்கு நாட்டின் சிறப்பான மற்றும் கவர்ச்சியான உணவுகள் இங்கு பரிமாறப்பட உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here