அம்மையார்குப்பம், மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையார்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில், பொன்னியம்மன் திருக்கோவில், சத்தியம்மன் திருக்கோவில், கிருஷ்ணர் திருக்கோவில் மற்றும் பழைய பொன்னியம்மன் திருக்கோவில் ஆகிய 5 திருக்கோவில்களிலும் இன்று காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் ஒரே நேரத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்கான திருக்கோவில் திருப்பணிகள் அனைத்து கோயில்களிலும் கடந்த சிலக்காலங்களாக நடைப்பெற்றது. மேலும் கணபதி பூஜை, உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் புவனேஸ்வரி ஹோமம் மற்றும் சண்டி ஹோமம் ங்களுடன் நடைபெற்றது. யாக பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து இன்று காலை வரை 11 கால யாக பூஜைகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து வேத விற்பன்னர்கள் யாகசாலையில் இருந்து புனித நீரை சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மூலவரின் விமானக் கலசத்திற்கு கொண்டு சென்றனர். காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அக்கிராமத்தில் உள்ள பெண்கள் ஆண்கள் என பொதுமக்கள் மற்றும் அவ்வூர் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர்களும் மேலும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்தவர்களும் திரளாக குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.






















