கும்பகோணம், பிப். 25 –
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திருநறையூர் கிராமத்தில் 7 குளங்கள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி சாலை மறியலில் ஈடுப்பட்ட 7பேரை கைது போலீசார் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரியும் இந்த குளத்திற்கான வடிகால் பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் , நாச்சியார் கோவில், திருநறையூர், போன்ற பகுதிகளில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளங்கள் உள்ள இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை கோவிந்த வல்லப பந்த் தலைமையில் 7 பேர் திடீரென நாச்சியார்கோவில் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.





















