திருவண்ணாமலை பிப்.15-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து  வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா என அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்தேர்வு புதன் வரை நடைபெறும். இதற்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்பட்டு பொதுத் தேர்வு போல நடத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடைபெறவிருந்த பிளஸ் 2 வகுப்புக்கான கடிதம் 10ம் வகுப்புக்கான அறிவியல் பாடங்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் திருவண்ணாமலை பகுதியில் சமுக வளைதளங்களில் நேற்று முன்தினம் வெளியானதாக தகவல் பரவியது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.அருள்செல்வத்திடம் கேட்டபோது திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் வெளியானதாக சமூக வளைதளங்களில் பரவிய தகவல் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வந்தவாசி அடுத்த பொன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கிய நிலையில் அந்த வினாத்தாள் எங்கே கசிந்தது என தெரிந்துகொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு வழங்கப்படடுள்ள கட்டுகள் ஏதேனும் பிரிந்துள்ளதா? என கண்டறிய அவற்றை வீடியோ பதிவு செய்து தனது செல்போனுக்கு அனுப்பிவைக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் தெரிவித்துள்ளார்.

சமூக வளைதளங்களில் வெளியான தகவலின்படி வந்தவாசி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து வினாத்தாள் கசிந்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பள்ளிகளிலிருந்து வினாத்தாளை படம் எடுத்தது யார், எப்படி வந்ததது? என விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சென்னை அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here