கும்பகோணம், பிப். 4 –
கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில், 23வது வட்டத்திற்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் கல்லூரி மாணவி மோனிகா (22), முன்னாள் நகர்மன்ற உறுப்பினரான தனது தந்தை ரமேஷை போல தனது வட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும், மக்கள் கேட்காமலேயே நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
மோனிகா தற்போது சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்ஸி பயோ கெமிஸ்டரி முதலாண்டு கல்வி பயின்று வருகிறார் இவரின் தந்தை ரமேஷ் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இதே வட்டத்தில் நகர்மன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட கடைசி நாளான இன்று ஒரே நாளில், அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மதிமுக என அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சுயேட்சைகளும் போட்டி போட்டுக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர் கடந்த மாதம் 28ம் தேதி தேதியே வேட்புமனு தொடங்கிய போது 30ம் தேதி விடுமுறையை தவிர்த்து எஞ்சிய 5 நாட்களில் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தது மொத்தமே 7 வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது நேற்று 3ம் தேதி ஒரே நாளில், 197 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் இதில் ஆண்கள் 95 பேர், பெண்கள் 102 பேர் ஆவர், தொடர்ந்து வேட்புமனு இறுதிநாளான இன்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சுயேட்சையாக நூற்றுக்கணக்கானோர் போட்டிப்போட்டுக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்
இதற்கிடையே, நிறைவு நாளான இன்று பிற்பகல், கடைசி நேரத்தில், தேமுதிக சார்பில், 13 பேர் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில், வேட்புமனு தாக்கல் செய்தனர் இதில் 40வது வட்டத்திற்கு மாநகர செயலாளர் நந்தகுமாரின் தாய் ராதா, 5வது வட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அன்பு, 11வது வட்டத்தில் மாநகர துணை செயலாளர் அப்புஜீ செல்வராஜ், 42வது வட்டத்தில் மாவட்ட பிரதிநிதி சரவணன் மனைவி உஷா, 46வது வட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் அழகரின் மனைவி சாந்தி அழகர், 33வது வட்டத்தில் மகளிர் அணி செயலாளர் நிர்மலா, 43வது வட்டத்தில் கேப்டன் மன்ற செயலாளர் பழனியின் மனைவி பாண்டீஸ்வரி, 10வது வட்டத்திற்கு வட்ட செயலாளர் பன்னீர் செல்வம், 20வது வட்டத்திற்கு வட்ட செயலாளர் குணசேகரன், 25வது வட்டத்திற்கு வட்ட செயலாளர் ஆனந்த், 26வது வட்டத்திற்கு வட்ட செயலாளர் முகமது சம்சுதீன், 35வது வட்டத்திற்கு வட்ட செயலாளர் சரவணன், 37வது வட்டத்திற்கு வட்ட செயலாளர் ஸ்ரீதர் என மொத்தம் 13 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்,
அதே போன்று பாமக சார்பில், தனித்து 48 வட்டங்களில் போட்டியிடும் நிலையில், நிறைவு நாளான இன்று, பீட்டர் பிரான்சிஸ் 22வது வட்டத்திற்கும், 39வது வட்டத்திற்கு கலையரசன், 30வது வட்டத்திற்கு வேல்முருகனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது இதனால் மாநகராட்சி வளாகமே திருவிழா கோலம் போல காணப்பட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிப்பு தொடர்புடைய நபர்களை மட்டும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்
பேட்டி : மோனிகா அதிமுக (23வது வட்ட வேட்பாளர்) கும்பகோணம் மாநகராட்சி