காஞ்சிபுரம், ஜன. 22 –
காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமரை தாங்கல் கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுயிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை லாரிகள் மூலம் கடத்தி செல்வதாக போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, ஒரு லாரி மற்றும் இரண்டு மினி லாரிகள் மூலம் குட்காவை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த சசிகுமார் (40) மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த பழனிவேல் (33) ஆகிய இருவரை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கைது செய்து, ஒரு லாரி, இரண்டு மினி லாரிகள், ஒரு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
வாகனங்களில் கடத்தி வந்த குட்காவின் மதிப்பு ரூ. 24 லட்சம் என காவல்துறை தரப்பில் வந்த தகவல்.. இதனைத் தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வந்த இருவரை பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்கா கடத்தி வந்த கும்பலின் தலைவன் யார் எந்த பகுதியில் குடோன் உள்ளது. என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






















