திருவண்ணாமலை, ஜன.17 –
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு திட்டமான சக்தி என்ற திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒஎஸ்சி என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் இணைந்துள்ளது. இதில் 24 மணிநேரமும் அனைத்து நாட்களிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ உதவி சட்ட உதவி காவல்துறை உதவி உளவியல் ஆலோசனை மீட்பு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும். இந்த சேவை மையத்தில் பணிபுரிய கீழ்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வழக்கு பணியாளர் 1, 2 தலா 2 (மகளிர் மட்டும்) தகுதி மற்றும் முன் அனுபவம் சமூகப் பணி ஆலோசனை மனநலம் குழந்தைகள் பெண்கள் மேம்பாடு அல்லது நிர்வாக மேம்பாட்டில் இளங்கலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் ஓராண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பந்தப்பட்ட அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் வேண்டும். அத்தகைய சூழலிலோ அல்லது இது தொடர்பான சூழல்களில் ஓராண்டு ஆலோசகர் பணியில் இருப்பது விரும்பத்தக்கதாகும். கல்வி தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பக்கலாம் மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தொகுப்பூதியம் ரூ.12ஆயிரம் இதரப்படி நாளன்றுக்கு ரூ.100 வீதம் வழங்கப்படும். பல்நோக்கு உதவியாளர் பணியிடம் 1 (மகளிர் மட்டும்) தகுதி மற்றும் முன் அனுபவம் ஏதேனும் அலுவலகத்தில் பணிபுரிந்த முன் அனுபவம் வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு சமையல் தெரிந்தருக்க வேண்டும். மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தொகுப்பூதியம் ரூ.6400 இதரப்படி நாளன்றுக்கு ரூ.100 வீதம் வழங்கப்படும். காவலர் மற்றும் ஓட்டுநர் பணியிடம் 1, தகுதி மற்றும் முன் அனுபவம் ஏதேனும் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த முன்அனுபவம் வேண்டும். உள்ளூரை சேர்ந்த மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொகுப்பூதியம் ரூ.10ஆயிரம் மேற்கண்ட பணியிடங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் 2ம் தளத்தில் இயங்கிவரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 31ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.