கும்பகோணம், டிச. 21
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை மாங்குடி பகுதியில் பதினோறு ஆண்டு காலம் அமைதி வழியில், அறவழி போராட்டம் நடத்தி, இந்திய உழவர் பெருமக்களுக்கு மின்மானிய உரிமையை பெற்று தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏராளமான விவசாயிகள், அவருக்கு வீரவணக்கத்துடன் புகழஞ்சலி செலுத்தியதுடன், உழவர்களை மட்டுமின்றி, ஏழை எளிய மக்களையும் பாதிக்கும் மத்திய அரசின் மின்மானிய திருத்த சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தியும், நாராயணசாமி நாயுடு திருவுருவப்படத்துடன் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
https://youtu.be/aNcrMXthQpE
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை மாங்குடி இந்திய உழவர்களுக்கு வேளாண்மை உற்பத்தி, மின்மானிய உரிமையை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு 1970 முதல் 1981 வரை தொடர்ந்து 11 ஆண்டு காலம் அமைதி வழி அறப்போராட்டங்கள் வாயிலாக தமிழக விவசாயிகளுக்கு மட்டுமின்றி, அகில இந்திய அளவில் அனைத்து விவசாயிகளுக்கும் பயன்பெற வழிவகை செய்தவர், இதன் பலனாக வேளாண்மைக்கு 20 மணி நேர மும்முனை மின்சாரம் உறுதிசெய்யப்பட்டது, இவரது போராட்டத்தின் பலனாக இன்று, தமிழகத்தில் மட்டும் 23.52 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள் இந்நிலையில், அவரது 37வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று அவரை போற்றிடும் வகையில் வளையப்பேட்டை மாங்குடி பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில், உழவர் பெருமன்ற தலைவர் நடராஜன் தலைமையில், ஏராகரம் சுவாமிநாதன் முன்னிலையில், பெண் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் திரண்டு, அவருக்கு வீரவணக்கத்துடன் புகழஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து உழவர்களை மட்டுமின்றி, ஏழை எளிய மக்கள் அனைவரையும் பாதிக்கும் வகையில் மத்திய அரசின் மின்மானிய திருத்த சட்டத்தினை எந்தவித நிபந்தனையும் இன்றி, முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தியும், நாராயணசாமி நாயுடு திருவுருவப்படத்துடன் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பேட்டி : சுந்தரவிமல்நாதன், செயலாளர், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்




















