சென்னை, நவ. 17 –

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடிட முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் உட்பட 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசிக் குடும்ப அட்டைதாரர்கள் குடும்பங்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப் பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட 2,15,48,060 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் குடும்பங்கள் சிறப்பாக கொண்டாடிட ரூ. 88 கோடி மதிப்பிலான 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிட முதலமைச்சர் ஆணைப் பிறப்பித்துள்ளார்.

அத் தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் துணிப்பையில் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பாக வழங்கப்பட இருக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here