சென்னை, அக். 22 –
தற்பொழுது தொழில் நடத்திக்கொண்டிருக்கும், தொழில் முனைவோருக்காக, பொருட்கள் சேவை, மற்றும் வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி 3 நாள் ( அரை நாள் ) கருத்தரங்கம் பற்றிய பயிற்சியினை வரும் அக். 27 முதல் அக். 28 -2021 ஆம் தேதி வரை மாலை 4 மணிமுதல் 7 மணி வரை 3 மணி நேரம் இப்பயிற்சி வகுப்பு நடைப்பெறுகிறது.
இப்பயிற்சி முகாம் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் நிறுவனத்தில் நடத்தவுள்ளது. இப்பயிற்சியில் டேலி அறிமுகம் – மாநிலத்துடன் செயல்படுத்துதல், ஜி.எஸ்.டி.ஐ.என். – செலவு வரி பங்குப் பொருட்கள் உள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனை, கூட்டு வியாபாரி,மூலதன பொருட்கள் கொள்முதல் பற்று குறிப்புகள் உள்ளீட்டு சேவைகள் பி 2 பி. பி. 2. சி ( சிறிய மற்றும் பெரிய ) B 2 G ஏற்றுமதி / SEZ விலக்கப்பட்ட விற்பனை – மெக்கானிசம், அட்வான்சின் மீதான வரி – ஜி.எஸ்.டி .ஆர்.ஐ. போன்றவை பயிற்று விக்கப்படும். தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்கள் வருகை தந்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இப் பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைப்பேசி மற்றும் கைபேசி எண்கள்
முன்பதிவு அவசியம்
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் :
86681 02600, 94445 57654 044 – 22252081, 22252082
சிட்கோ தொழிற் பேட்டை , பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600 032