ராமநாதபுரம், அக்.11 –

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ராலி ஸ்போர்ட்ஸ், இராமநாதபுரம் பேட்மிட்டன் அசோசியசன், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான இறகு பந்து விளையாட்டு போட்டி ராலி ஸ்போர்ட்ஸ் உள்ளரங்க மைதானத்தில் ரஹ்மத்துல்லா ஹிப்பத்துல்லா ஆகியோர் தலைமையில் போட்டி நடைபெற்றது.

திருவாடனை வட்டார அனைத்து ஜமாத் தலைவர்கள்,  பொறியாளர் அபுபக்கர் போட்டியை தொடங்கி வைத்தார்.  ஆர்.டி.பி. துணை செயலாளர் வள்ளல்  லியாக்கத், சாதிக்  ஹமிது,   சேக் பரிது, அஸ்பாக், பொறியாளர்கள் தாசிப் அஹமது, சதாம் ஹுசைன்,  முன்னாள் ஊரட்சி மன்ற தலைவர் மைதீன்,  ஜெகன் கண்ணன்,  பொறியாளர் ஜமில், டாப்டெக்ஸ் பைசல் ரஹ்மத் அலிகான் நசிர், பாண்டி, சேக்  இந்தியன் கலிபுல்லாஹ்  . நம்புதாளை தொண்டி ஊர் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

40 வயதுக்கு மேற்பட்டவற்கான போட்டியில் கணேஷ்மூர்த்தி சசிகுமார் முதல்பரிசும், ரெங்கேஸ்வரன், சக்திவேல் (ஆர்.எஸ். மங்களம்) இரண்டாம் பரிசும்,
சாதிக்பாட்சா, மகேந்திரன் (தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப்) மற்றும் குத்புதீன், ஜோதிஆனந்த் தொண்டி ஸ்போர்ட்ஸ்கிளப் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் கந்தவேல், கல்யாண்குமார் முதல்பரிசும்,
பாலாஜி அன்வர்ராஜா இரண்டாம்பரிசும், மகேந்திரன் ரெங்கேஸ்வரன் (இராமநாதபுரம்). அலெக்ஸ்ஹரி (பரமக்குடி) மூன்றாம் பரிசும் பெற்றனர்.
ஏற்பாடுகளை பயிற்றுனர் கல்யாண், அப்துல்கரிம் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள்  சாதிக், குதுப் ஜிப்ரிக், சேகர்   பெரியசாமி  தேவா, சலிம்கான். பைசல்  ராஜ்,சதிஸ் ஆரோக்கியதாஸ்  ஹிதாயத்துல்லாஹ்  குணா,  அபுல் பைஸ் ஆகியோர் செய்திருந்தனர்.  ஸ்போர்ட்ஸ்கிளப் நிர்வாகி சாதிக்பாட்சா நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here