கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதியில் ஒரே வீட்டில் 3 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்த வீதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி அறிவித்துள்ளது .
கும்பகோணம், செப். 29 –
கும்பகோணம் நகரில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. பாணாதுறை வடக்கு வீதியில் ஒரே வீட்டில் 3 நபர்களுக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சியால் அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
சுகாதாரத்துறை பணியாளர்கள் அப்பகுதியில் வேறு யார் யாருக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி மருந்துகளும் தெளிக்கப்பட்டு வருகிறது.