காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ராஜலட்சுமி மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம், மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம், செப் . 28 –
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, உள்ளிட்ட கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட வார்டு எண்.2, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ராஜலட்சுமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வேண்டா அமுர்தம் வேதாச்சலம் ஆகியோர்களை ஆதரித்து இன்று வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட் பட்ட ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம், மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம் மற்றும் திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமான சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் படைச்சூல வீதி வீதியாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் கிராம மக்களிடம் தேர்தல் பிரச்சார துண்டு பிரச்சுரங்களை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வழங்கினர். சென்றயிடமெல்லாம் கிராம மக்கள் பாட்டாசுகளை வெடித்து திமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது காஞ்சிபுரம் நகர செயலாளர் சன் பிராண்ட் கே.ஆறுமுகம், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.பூபாலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.