திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி ஆணையாளராக சி. ராமஜெயம் நேற்று பதவி ஏற்றார். இவர் இதற்கு முன்பு ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாராக பணியாற்றினார். வந்தவாசி நககராட்சி பொறியாளரும் பொறுப்பு ஆணையாளரான டி.உஷாராணி, பொறுப்புகளை புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்திடம் ஒப்படைத்தார்.
புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்தை, நகராட்சி மேலாளர் என்.ராமலிங்கம், கட்டிட ஆணையாளர் நடராஜன், பணி மேற்பார்வையாளர் சண்முகம், கணக்காளர் பிரேமா, இளநிலை உதவியாளர் சிவகுமரன் உள்பட ஊழியர்கள் பலரும் வரவேற்றனர்.