கும்கோணம் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் உருவாக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் பொருட் செலவிலான பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலை அமைத்து அவரது பிறந்த நாளை கோலாகலமாக மதிமுக கட்சியினர் கொண்டாடினார்கள்.
கும்பகோணம், செப். 15 –
இன்று செப் 15 மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113 வது ஆண்டு பிறந்த நாளாகும். அதனை தமிழ்நாடு அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப் படுகிறது. அந்நாளில் அவரது பெயரிலான பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை, காவல் சீருடை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கி அவரது புகழுக்கு பெருமை சேர்த்து வருகிறது.
அதனைப் போன்று அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு மடத்துத் தெருவில் ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பிலான புதியதாக அண்ணா திருவுருவ சிலையை அவரது மீதான பற்றையும் அவர் கொண்ட கொள்கையை போற்றும் வகையிலும், உருவாக்கி அன்னாரது 113 வது பிறந்த நாளை மதிமுக கட்சியினர் கொண்டாடினார்கள்.
இன்று காலை மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் அண்ணாவின் திருவுருவ நிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாறன் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் நகரச் செயலாளர் செந்தில் ஒன்றிய செயலாளர் முருகேசன் சொக்கலிங்கம் கவியரசன் மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் சத்ய குமரன் மாவட்ட செயலாளர் அரங்க செல்வகுமார் தொண்டர் அணி பொறுப்பாளர் தர்மா வெகில்முத்து நகர பொருளாளர் தியாகு மாவட்ட பிரதிநிதிகள் முருகன் முரளி ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.