பொன்னேரி, ஆக. 24 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் இன்று போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் 6 முதல் 10 ஆம் வகுப்புவரை அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் தொடங்கிய இப்பேரணி மீஞ்சூர் பஜார் வீதி மற்றும் பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் பங்கேற்றவர்கள் பொதுமக்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் முழக்கங்கள் எழுப்பியும் கையில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் சென்றனர்.
இந் நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் .மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர்கள், மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் திரளானவர்கள் பங்கேற்றனர்.