காஞ்சிபுரம், செப். 14 –
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் உள்ளது. இது குறித்து விவரம் அடங்கிய பாதாகையை கோயில் நிர்வாகம் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும் என்பது மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
இதன்படி காஞ்சிபுரத்தில் பல கோயில்களில் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எவ்வளவு வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது மற்றும் சொத்து விவரம் அடங்கிய பாதாகைகள் வைக்கப்பட்டது.
ஆனால் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலில் மட்டும் இது போல் சொத்து விவரம் அடங்கிய பாதாகைகள் வைக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு டில்லிபாபு என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்தின் படி 448.43ஏக்கர் உள்ளது என நிர்வாகம் பதில் தந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த 2ஆண்டுகள் கழித்து 16-08-2021 தேதி சு.அண்ணாமலை என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்தின் படி 177.20 ஏக்கர் மட்டுமேதான் உள்ளது என கோயில் நிர்வாகம் பதில் தந்துள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் 271 ஏக்கர் நிலங்கள் மாயமாகி உள்ளது என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தற்போது தெரியவந்துள்ளது