திருவள்ளூர் செப் 08 –
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களை ரவுடிகள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்தும் சேலம், மேட்டூர் பெண் வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்ககோரியும், தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர்கள் இளவரசு,டாக்டர்.தமையன் ஜான்,சீனிவாசன்,ரகுபதி,ஆரோன் அன்பு,மகேந்திரன்,சிவா,அலெக்ஸ் உட்பட 50 க்கும் மேற்படட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.