ஆர்.எஸ்.மங்கலம், செப். 6 –
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு ஆனந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பட்டாணி மீரான் த.மு.மு.க., மற்றும் ம.ம.க வின் சேவைகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் தன்னை முழுமையாக இணைத்து கொண்டதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் த.மு.மு.க., மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி , ஊடக அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பஹ்ருல்லா ஷா, விவசாய அணி மாவட்ட செயலாளர் ரைசூல் இஸ்லாம், மனித உரிமை பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் நாகூர் கனி PP மாவட்ட செயலாளர் அன்சாரி ஆலிம், தொண்டி பேருர் தலைவர் காதர், பேரூர் மமக செயலாளர் பரக்கத் அலி, பேரூர் த.மு.மு.க., செயலாளர் சம்சுதீன் முனவ்பர் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.