pic: file copy
திருவண்ணாமலை, செப்.3-
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின் படியும் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின் படியும் வருகின்ற 11ந்தேதி அன்று செங்கம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றமானது செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்வதற்கும், மேலும் மின்சார பயன்பாடு, வீட்டுவரி, தொலைத் தொடர்பு பயன்பாடு, ஜீவனாம்சம் பெறுதல், நில ஆக்கிரமிப்பு வழக்குகள் மற்றும் கல்விக்கடன், விவசாய கடன், தொழில் கடன் உள்ளிட்ட வங்கி சார்ந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வழக்காடிகள் நேரடியாக தங்கள் வழக்கறிஞருடன் இந்த மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டு தங்கள் வழக்குகளை விரைவாகவும் எளிதாகவும் முடித்துக்கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செங்கம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான பு.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.