செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப் படம் இரமேஷ்

 

திருவண்ணாமலை, ஆக.19 –

 

திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஒரு தனியார் திருமண மஹாலில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள “அசாதி கா அம்ரித் மகோத்சவம்” முன்னிட்டு பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

பிரதம மந்திரி கிராம சாலைத்திட்டம் 2000ஆம் ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது. சாலை வசதியில்லாத 500க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட குக் கிராமங்களுக்கு சாலை வலைத்தள அமைப்புகளின் அடிப்படையில் முக்கிய இணைப்புச் சாலை அமைத்தல் மற்றும் சாலைகளை மேம்பாடு செய்தல்,  இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு முதல் 60 சதவிதம் ஒன்றிய அரசு நிதி மற்றும் 40 சதவிதம் மாநில அரசு நிதி மூலம் செயல் படுத்தப்படுகிறது.

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், 2000 முதல் 2019 வரை 633.95 கி.மீ நீளமுள்ள 263 சாலைப்பணிகள் ரூ.124.98 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், ஒன்றிய அரசால் 2013ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டம் குக்கிராமங்களின் இணைப்பு சாலையினையும் மாவட்டத்தின் முக்கிய சேவை வசதி கொண்ட வளரும் மையங்களை இணைக்கும் பிறசாலை மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் 2017-18 வரை 97.40 கி.மீ நீளமுள்ள 27 சாலைப்பணிகள் ரூ.31.55 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், ஒன்றிய அரசால் 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இத் திட்டம் குக் கிராமங்களில் இருந்து சந்தை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை இணைக்கும் பிரதான சாலை மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்துவமே ஆகும். இத்திட்டத்தின் முக்கிய ஊரக சாலை மற்றும் தகுதியான சாலையின் நீளம் குறைந்தது 5 கி.மீ இருக்க வேண்டும்.   பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் 2020-21 வரை 201.865 கி.மீ நீளமுள்ள 56 சாலைப்பணிகள் ரூ.98.38 கோடி செலவில் எடுக்கப்பட்டு, இதுவரை 11.76 கி.மீ நீளமுள்ள 4 சாலைப் பணிகள் ரூ.4.25 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளின் ஐந்தாண்டு தொடர் பராமரிப்பிற்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த பணிகளை செயல்படுத்திய ஒப்பந்ததாரரே 5 ஆண்டு தொடர் பராமரிப்பையும் செயல்படுத்த ஒருங்கிணைந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிராம சாலைகளின் பராமரிப்பு ஒன்றிய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட இமார்க் எனப்படும் தனிப்பட்ட வலைய இணைய முகப்பின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தை, தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2016 முதல் 2021 வரை ஊக்கத் தொகையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.10.16 கோடி நிதி 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு முடிவுற்ற பிரதம மந்திரி கிராம சாலைகளின் காலமுறை பராமரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில், 108.83 கி.மீ நிளமுள்ள 54 பணிகள் ரூ. 10.16 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, இதுவரை 98.39 கி.மீ நீளமுள்ள 49 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இக்கருத்தரங்கில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள எல்லா சாலைகளும் இணைக்கப்பட்டுள்ளன. எந்த கிராமங்களிலும் சாலை இணைக்கப்படவில்லை என்று சொல்ல முடியாது. மேலும், சாலைகள் போட்டு 6 மாதத்திலே சாலைகள் சேதமடைந்து விடுகிறது, எந்த பருவநிலை காலங்களிலும் சாலைகள்  சேதமடையாமல் இருக்க, தேவையான முயற்சிகளை எடுத்து, சாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்ப முறையில் புதிய தொழில் நுட்ப நுணுக்கங்களை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்படுகிறது ஜமுனாமரத்தூரில் நெகிழியை பயன்படுத்தி சாலைகள் போடப்பட்டுள்ளது என்றும், சுற்றுச்சூழல் பாதிக்காவண்ணம் மாற்று தொழில்நுட்ப முறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் செயல்படும் விதம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில், கூடுதல் ஆட்சியர், மு.பிரதாப், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.தணிகாச்சலம், மாநில தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அலுவலர் (சாலைகள்) ஈ.ராஜமோகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, தொழில்நுட்ப வல்லுனர்கள் எஸ்.சிங்காரவேலன், சுபின் புன்னோஸ், ஊரக வளர்ச்சித்துறை (சாலைகள் – பாலங்கள்) உதவி செயற்பொறியாளர்கள் பாஸ்கர், சக்திவேல், உபகோட்ட பொறியாளர்கள் சரவணன், ரவிசந்திரன், பூங்கொடி, டர்வின்குமார், சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கே.பி.மகாதேவன், பி.பி.முருகன், ஏ.எஸ்.லட்சுமி, ப.விஜயலட்சுமி, கே.நிர்மலா, ஆ.சம்பத், ஜி.பழனி, அமிர்தராஜ், அருணாசலம், பாஸ்கரன், மற்றும் உதவி பொறியாளர்கள், பணிமேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here