பிரதமர்  நரேந்திரமோடியால் தொடங்கப்பட்ட ‘மைகவ்’ இணையதளம், 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ஆன்லைன் தளம் மூலம் மக்களுக்கு நெருக்கமாக, அரசை கொண்டு செல்ல ‘மைகவ்’ (https://www.mygov.in/) என்ற இணையதளத்தை பிரதமர்  நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கு தேவையான கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் மக்கள்  பகிர்ந்துக் கொண்டனர். இந்த தளம் தனது 7 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது.

மக்கள் பங்களிப்பு நிர்வாகத்தை வளர்த்ததில், மைகவ் இணைய தளத்தின் பங்களிப்பை நினைவு கூறும் நிகழ்ச்சி, ‘நேர்மறையான எனது அரசு (MyGov Positive ) என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. சமூக இணையதளத்தை நேர்மறையாக பயன் படுத்துவதை ஊக்கு விப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

கொரோனா பற்றி தவறான தகவல்கள் நாட்டில் பரவும் நிலையில், மைகவ் இணையதளத்தின் கொரோனா உதவி மையம் – வாட்ஸ் அப் கலந்துரையாடல் மூலம் பொய் செய்தி களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நம்பகமான செய்திகளை வழங்கியது.

மக்களை ஈடுபாடு கருத்தை முன்னெடுத்துச் சென்று, சிறந்த நிர்வாக இலக்கை அடைய, மைகவ் உத்தரப்பிரதேசம் இணையதளத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, மைகவ் இணையதள தலைமை நிர்வாக அதிகாரி  அபிஷேக் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

மைகவ் குழுவின் பங்கை பாராட்டிய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிப்பதன் மூலம், அனைத்தும் உள்ளடங்கிய நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்தும் பிரதமரின் கனவை நனவாக்க மைகவ் இணையதளம் பணியாற்றியுள்ளது’’ என்றார். 

ஆட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் மக்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதில் மைகவ் இணையதளம் ஆற்றிய புதுமையான பங்கை உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here