திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்களாக சேர விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்து ரூ.100 பங்குத்தொகை மற்றும் ரூ.10 நுழைவு கட்டணம் ஆகியவற்றுடன சங்கத்திற்கு நேரில் சென்று செலுத்தி உறுப்பினராக சேரலாம்.
நேரில் செல்ல முடியாதவர்கள் விண்ணப்பத்தினை பதிவு தபாலில் அனைத்து ஆவணங்களையும் இணைத்து பங்குத்தொகை, நுழைவு கட்டணத்தொகை அஞ்சலகம் மூலம் செலுத்தி ரசீது எண், செலுத்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர், முகவரி ஆகியவற்றை சேர்த்து அனுப்பலாம்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து சங்கத்தின் சேவையையும் கடனுதவிகளையும் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை – இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் அறிவிப்பு !