ராமநாதபுரம், ஆக. 17- ராமநாதபுரத்தில் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து  இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். ராமநாதபுரம் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து ராமநாதபுரம் கேணிக்கரையில் தனியார் மகாலில் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தினர். இம்முாகில் இருதயம், புற்றுநோய், சர்க்கரை நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை இலவசமாக பார்க்கப்பட்டது. முகாமை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்தம் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட இணை செயலாளர் செந்தில் வேல் , அருள் சகாய பிரபு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் மதிசூடன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் கோகிலா, மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் மணிகண்டன், நகர் செயலாளர் கணேசமூர்த்தி, இணை செயலாளர் தட்சிணாமூர்த்தி, கேசவன், வெங்கடசுப்பு, முருகன், நகர் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் கார்த்தி, ரமேஷ், சரத், தம்பிதுரை, ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர். மருத்துவ முகாமில் ரூ.2 ஆயிரத்து 500 மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டன. இருதய நோய்க்கான சிறப்பு சிகிச்சைகள்ச, ஆஞ்சியோகிராம் பரிசோதனை, சர்க்கரை நோய்க்கான இலவச பரிசோதனை, இசிஜி முதலிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நுாற்றுக்கும் மேற்பட்டோர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். சிகிச்சை பெற்றவர்களுக்கு உரிய மாத்திர மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேல்சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை மதுரைக்கு அழைத்து சென்று இலவசமாக மேல்சிகிச்சை அளித்து குணமடைந்தபின் அனுப்பிவைக்கபடுகின்றனர்.  ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடந்த மருத்துவ முகாம் மூலம் ராமநாதபுரம் நகர் மக்கள் பயனடைந்தனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here