ராமநாதபுரம், ஆக. 14- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற் பார்வையாளர் எம். அன்வர் ஜஹான் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர்கள் சுரேஷ் குமார், ரவி, ஒருங் கிணைப்பாளர் ரமேஷ் கண்ணன், பால முருகன் உட்பட பலர் பங் கேற்றனர். டாக்டர்கள் கோவிந்தன், காண்டீபன், உமா மகேஷ்வரன், ராம்பாபு ஆகியோர் 200 மாணவர் களுக்கு மனநலம், கண், எலும்புமுறிவு, பொதுமருத்துவ சிகிச்சை, பரி சோதனை களை செய்தனர். திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு
காதொலிக்கருவி, சக்கர நாற்காலி ஆகியவை வழங்கப் பட்டது. வட்டார ஒருங் கிணைப்பாளர் சந்தனக்குமார் நன்றி கூறினார்.
முகப்பு அரசுத் திட்டங்கள் திருப்புல்லாணி: அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்