தேனிமாவட்டம் ஜக்கநாயக்கன் பட்டியில் காந்தி இளைஞர் மன்றம் சார்பில் நேருயுவகேந்திரா கீழ் தூய்மை பாரத கோடைக்கால தீவிர தூய்மைப் பணி முகாம் மற்றும் சைக்களில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

தேனி; ஜூலை, 20- தேனி மாவட்டம் போடி அருகே ஜக்கம் நாயக்கன்பட்டியில் நேரு யுவகேந்திரா கீழ் பதிவு பெற்ற காந்தி இளைஞர் மன்றம் சார்பில் தூய்மை பாரத கோடைக்கால தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் போடி திருமாபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் சுற்றுபுறத்தில் குவிந்திருந்த மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை கண்டறிந்து அங்கிருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியினை மேற் கொண்டனார்.

அதனைத் தொடர்ந்து தூய்மை பாரத விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.  அதில் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்போம், மழைநீரை சேமிப்போம், மரம் வளர்ப்போம், திறந்தவெளி கழிவறை தவிர்ப்போம், சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பேணிக் காப்போம் போன்ற பதாகைகளை சைக்கிள்களில் கட்டி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெரு மற்றும் நகரப்பகுதிகளில் உரக்க உரைத்து வலம் வந்தனர். இந்த முகாம் ஏற்பாடுகளை காந்தி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கோபி செய்திருந்தார். இந்த பேரணியில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here