தாமரைக் குளத்தில் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிக ளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப் பெற்றது. அவ் விழா வினை ஏற்பாடு செய்த
அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலா ளர் சேதுபாலசிங்கம் மாணவ, மாணவியர் களுக்கு நலத்திட்ட உதவி களை வழங் கினார்
ராமநாதபுரம், ஜூலை 15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராசரின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சேதுபாலசிங்கம் தாமைரக்குளம் கிராமத்தில் அன்னதானம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராசர் 117வது பிறந்தநாள் விழா பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசியல் கட்சிகளிலும் வெகு இன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில்
ராமநாதபுரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம் ஏற்பாட்டில் ராமநாதபுரம் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் பெருந்தலைவர் காமராசரின் 117-வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது.
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கினார். பிற் பகலில் தாமரைக்குளம் பெருந்தலைவர் காமராசர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் தமிழ்நாடு மாநில பனைத் தொழிலாளர் சங்க தலைவருமான சேதுபாலசிங்கம் தொடங்கி வைத்து மக்களுக்கு சுவையான அன்னதானத்தை வழங்கினார். இந் நிகழ்ச்சியின் போது திருப்புல்லாணி ஒன்றிய கழக செயலாளர் முனியாண்டி, ஊராட்சி செயலாளர் சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.