ராமநாதபுரம், ஜூலை 14-
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு எடுத்து இது குறித்து மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என மாநில செயலாளர் பாரூக் தெரிவித்தார்.
ராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு பிரசார செயல் திட்டத்தை முன்னிட்டு செயல்வீ ரர்கள் கூட்டம் மாவட்ட தலமையகத்தில் நடந்தது. கூட்டத்தில் சுமார் 200 கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் பாரூக் பேசுகையில், சென்னையில் கடும் வெள்ளம் வந்து பாதித்த போது நமது முஸ்லிம் பெருமக்கள் பெரிய அளவு உதவி செய்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் “பாய்மார்கள்… தாய்மார்கள் ஆகிவிட்டனர்” என்றனர். பள்ளி வாசல்களில் தங்க வைத்து ஜாதிமத பேதமின்றி தங்க வைத்து உதவிகள் செய்தோம். தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது. கோர்ட்டில் நீதிபதி ஹெல்மெட் அணியாமல் சென்று இறந்தவர்கள் பட்டியல் கேட்டார். அதனால் நாங்கள் ஒரு முடிவு எடுத்தோம். அதாவது, ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வழியுறுத்தி ஊர்வலம் அத்துடன் ஹெல்மெட் அணிய வேண்டும் தீவிர வாதம் ஒழிய வேண்டும் என்பதையும் சேர்த்து வழியுறுத்த உள்ளோம். இளைஞர்கள் இந்த பேரணி ஏற்பாடு செய்வதில் இரண்டு வகையான பயன்கள். ஒன்று ஹெல்மெட் அணிவதால் உயிர் பாதுகாப்பு, இண்டு முஸ்லிம்கள் தீவிரவாதிகள் கிடையாது, தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை புரிய வைக்கவும் முடியும். அதே போல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் லட்சகணககான மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானித்து அதற்கான பணியை துவங்கி விட்டோம். 30 லட்சம் மரக் கன்றுகள் நட திட்ட மிட்டுள்ளோம். மேலும் உலகத்தில் தீவிரவாதத்தை துடைத் தெறியும் விதமாக தீவிர வாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரசாரம் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்கள் நாடெங்கும் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு செய்து அதற்கான ஆயுத்த பணிகளில் இறங்கி விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பசீர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆரிப்கான் மாவட்ட பொருளாளர் ரஹமான் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் தினாஜ்கான், நசுருதீன், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் இப்ராகீம் நன்றி கூறினார்.