தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைப் பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளில் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக் கணக்கானோர் இன்று தங்கள் குறைக் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர் . அப்போது 30 கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி மனுவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்கள்.
தேனி:ஜூன்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் நடைப் பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளானயின்று முப்பது குடும்பத்திற்கும் மேற் பட்ட நரிக் குறவர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர் மணிவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர் .
மேலும் அம் மனுவில் தாங்கள் தேனி மாவட்டம் மார்க்கையன் கோட்டை யில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். குறவர் இன மக்களான நாங்கள் இதுவரை நாடோடிகளாக அதுவும் கூடார வாசிகளாக வசித்து வருகிறோம். மார்க்கயன் கோட்டையில் உள்ள நெல் களத்தில் கூடாரம் போட்டு வசித்து வருகின்றோம்.தற்போது திடீரென்று கூடாரத்தினை காலி செய்யும் மாறு இடத்தின் உரிமையாளர்கள் கூறுவதாகவும், தற்போது அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து வருவதாகவும், மேலும் குடும்ப அட்டை மற்றும் அரசு ஆவணங்கள் முகவரிகளும் மார்க்கயன் கோட்டையில் உள்ளது என்றும் திடீரென்று இடத்தினை காலி செய்வதினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாகவும் மேலும் அங்கு கல்வி பயின்று வரும் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப் படும் ஆதலால் தாங்கள் எங்கள் இனமக்களுக்கு அப்பகுதியிலயே மாற்று இடம் அமைத்து தரும் படி கேட்டுக் கொள்வதாக அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.