ராமநாதபுரம், ஜூன்
இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தார். இதனால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கொடூர தாக்குதல் நடந்தது. இது போன்ற விரும்பத்தகாத செயல்களை தடுக்கக்கோரியும், அரசு, தனியார் மருத்துமனை டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு
இந்திய மருத்துவர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் அரவிந்த ராஜ் தலைமை வகித்தார் . செயலாளர் கலிலூர் ரகுமான் முன்னிலை வகித்தார். பொருளாளர் மனோஜ்குமார், மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை அப்துல்லா, அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலர் முத்தரசன், முதுநிலை துணை தலைவர் மலையரசு, செயற்குழு உறுப்பினர் ஞானக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்திய மருத்துவ கழகம் ராமநாதபுரம் மாவட்ட கிளை தலைவர் அரவிந்தராஜ், செயலர் கலிலூர் ரகுமான், பொருளாளர் ஆனந்த சொக்கலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்திய மருத்துவ கழகம் தேசிய அளவில் போராட்டம் அறிவிக்கிறது. ஜூன் 14 ஐ ஒரு கருப்பு தினமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறைக்கு எதிரான முழுமையான எதிர்ப்பு அறிவித்துள்ள நிலையில் ,மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் இளம் மருத்துவர் ஒருவர் மீது கொலை வெறியுடன் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். சர்வதேச மருத்துவ சங்கம் மருத்துவ அமைப்புகளுக்கு எதிராக வன்முறை சம்பவங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில் இது அரங்கேறியுள்ளது இந்நேரத்தில் இந்திய அளவில் மருத்துவ அமைப்புகளுக்கான பாதுகாப்பு முறையை ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்லும் விதிமுறைகள் இச்சட்டத்தின் இணைக்கப்படவேண்டும் மருத்துவ மையங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றில் பாதுகாப்பை அந்தந்த மாநிலங்கள் ஏற்க வேண்டும் இந்த மாதிரியான வன்முறைகள் நோயாளிகளுக்கு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும் மருத்துவ மையங்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவார்கள் மருத்துவ ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் ஆகவே கருத்துக்களை மனதில் கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தபோது மாவட்ட வட்டார அலுவலகங்கள் முன்பு கோரிக்கை போராட்டம் நடத்துவது மாவட்ட அதிகாரிகளை சந்தித்து தேசிய வன்முறை தடுப்புச் சட்டம் அமைக்கக் கோரி மனு தாக்கல் செய்வது பத்திரிக்கை நண்பர்களை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து விளக்கம் தருவது தேசிய இந்திய மருத்துவ சங்கம் இந்நேரத்தில் மருத்துவக் கல்லூரிகள் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இளம் மருத்துவருக்கு ஆதரவு தெரிவித்து நடந்த வன்முறையை கண்டிக்கிறது கோரிக்கையை நிறைவேற்ற இந்திய மருத்துவ கழகம் ராமநாதபுரம் கிளை கடுமையாக போராட தயாராக உள்ளது என்றனர்.