ராமநாதபுரம், மே 5-
ராமநாத புரம் வேல் மருத்துவ மனையும் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனையும் இணைந்து ராமநாத புரத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவை துவங்கி உள்ளனர்.
ராமநாத புரம் வேல் மருத்துவ மனை யில் சூப்பர் ஸ்பெஷா லிட்டி புற நோயா ளிகள் பிரிவை இந்திய மருத்துவ சங்கத் தின் தலைவர் டாக்டர் அரவிந்த் ராஜ் , செயலாளர் கலில் ரஹ்மான் ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக வேல் மருத்துவ மனை டாக்டர் மலையரசு வர வேற்றார்.
ப்ரீத்தி மருத்துவ மனை இயக்குனர் டாக்டர் சிவ குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹேமா ஆகியோர் கூறிய தாவது:
மதுரையில் கிடைக்கும் சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவ வசதி ராமநாத புரம் மக்களு க்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத் தில் ராமநாதபுரம் வேல் மருத்துவ மனை யுடன் இணைந்து சிறப்பு நவீன சிகிச்சை புற நோயளிகள் பிரிவை துவுங்கி உள்ளோம். இந்த பிரிவில் இருதய சிகிச்சை, மூட்டு மாற்று, நியூரோ, இஎன்டி போன்ற அனைத்து சிறப்பு டாக்டர் களும் சிகிச்சை வழங்குவர். ராமநாத புரத்தில் வைத்தே மதுரைக்கு நிகரான சிகிச்சை வழங்கப் படும். சில தவிர்க்க முடியாத நேரங் களில் மட்டும் நோயா ளிகள் மதுரைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப் படும். அவ்வாறு சிகிச்சை பெறும் நோயாளி களுக்கு மீண்டும் தொடர் சிகிச்சை ராமநாத புரத்திலேயே பெறலாம். குறிப்பாக இங்கு நோயாளி களுக்கு அனைத்து விதமான அதவாது 45 வகையான காப்பீடு திட்டங் களும் ஏற்று கொள்ளப் படும். உயர் ரக சிறப்பு சிகிச்சை எளிதாக ராமநாத புரம் மாவட்ட அனைத்து பகுதி மக்களுக் கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத் தில் தான் துவங்கி உள்ளோம். வாரத்தில் 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பிரிவு செயல் படும் என கூறினார்.
டாக்டர்கள் சின்ன துரை அப்துல்லா, சத்யா ஸ்டீபன் ராஜ், ஞான குமார், ப்ரீத்தி மருத்துவ மனை டாக்டர்கள் கவுரி சங்கர், அசிம், சங்கர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உட்பட பலர் இந் நிகழ்ச் சியில் பங் கேற்றனர்.