ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நர்சரி பள்ளியில் விளையாட்டு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் பாலசமுத்திரம் ஆசிரியர் நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளியில் பயிலும் பல்வேறு வகுப்பு மாணவர்கள் விளையாட்டு போட்டிகள், யோக மற்றும் தனித்திறன் போட்டிகளில் கலந்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களை மேலும் எதிர்வரும் காலங்களில் பல வெற்றிகளை பெற ஊக்கமளித்திடும் வகையில் ஆசிரியர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்கள், மற்றும் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவேற்று பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி பேசினார்.
இந் நிகழ்ச்சியை ஆசிரியை மகேஷ் தொகுத்து வழங்கினார். விழாவின் ஏற் பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனார்.