சிவகாசி:
சிவகாசி நகராட்சி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. – தி.மு.க. இடையேதான் போட்டி. புதிய தமிழகம், தே.மு.தி.க. வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தே.மு.தி.க. நிச்சயம் எங்கள் அணிக்கு வரும்.
ஜெயலலிதா இருந்த போது பா.ம.க. எங்கள் அணிக்கு வரவில்லை. தற்போது அம்மா இல்லாததால் வலுவான கூட்டணி அமைக்க பா.ம.க,வுடன் சேர்ந்துள்ளோம். கமல், ரஜினியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் தற்போது அமைத்துள்ளதுதான் வலுவான கூட்டணி.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.