ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். அதனை தொடர்ந்து நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்., 24 ல், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் தலா ஒரு பவுன் மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் குழந்தை உடை, குழந்தை படுக்கை, கை கழுவும் திரவம், சவுபாக்யா உள்ளிட்ட 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தையும் வழங்கினார். மருத்துவனை உள், வெளி நோயாளிகளிடம் அமைச்சர் மணிகண்டன் குறை கேட்டார்.
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், மூத்த மருத்துவர் மலையரசு, மகப் பேறு டாக்டர் சிவானந்தவல்லி, மாவட்ட அதிமுக அவைத் தலைவர் செ. முருகேசன், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ராஜேந்திரன், நகர் பொருளாளர் ஜெயக்குமார், துணை செயலர் ஆரிப் ராஜா உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சியின் 3, 5, 8, 9, 21, 23, 26, 27, 29 ஆகிய வார்டுகளில் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அதிமுக., கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் இணை செயலாளர் தஞ்சி சுரேஷ் குமார், கடலாடி ஒன்றிய அதிமுக துணை செயலர் சண்முகபாண்டியன், முன்னாள் நகர் செயலாளர் கே.சி. வரதன், அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் மாவட்ட செயலாளர் ராபர்ட், நகர் ஜெ., பேரவை செயலர் முத்து பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் வாசுகி, வீரபாண்டியன், புவனேஸ்வரி, நாகஜோதி, வார்டு செயலர் ஆதில் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.