பனாஜி:
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து அவரது வீட்டில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் என கோவா முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.