சீர்காழி, மே. 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6ஆம் ஆண்டு விழா  பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. மேலும் அவ்விழா பள்ளி தாளாளர் சுதேஷ் முன்னிலையிலும், கல்வி நிறுவங்களின் நிறுவனர் கியான்சந்த் தலைமையிலும் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுனர் புவனா பாலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில். கல்வி நிறுவங்களின் நிறுவனர் கியான்சந்த் தனது சிறப்புரையில் இந்த பள்ளி குறுகிய காலத்தில்  அறிவியல் படைப்பில் மாணவர்களின் பங்களிப்பில் ஏவப்பட்ட சிறிய ரக விண்கலங்கம், மடிக்கக் கூடிய மைக்ரோஸ்கோப் உருவாக்கியது மற்றும் அறிவியலில் மட்டுமின்றி மாணவர்களை இயற்கை விவசாயத்தில் ஊக்குவிப்பது பற்றி பாராட்டினார். மேலும் அவர்களின் திறன் மென் மேலும் வளர வாழ்த்தினார். லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுனர் புவனா பாலு தனது சிறப்புரையில் இது போன்ற பள்ளியில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையென்றும், மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தங்களை சிறந்த குடிமகன்களாக உருவாக்கிக் கொள்ள அறிவுறுத்தினார்.

பள்ளி தாளாளர் தனது உரையில் பள்ளியில் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளவைகளை எடுத்துக் கூறி அவற்றிற்கு மாணவர்களும், பெற்றோர்களும் ஒத்துழைப்பு அளித்திடக் கோரினார். பள்ளி முதல்வர் வித்யா ஆண்டறிக்கை வாசித்தார். தேர்வுகள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்  மற்றும் பள்ளியில் நீண்ட காலம் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் விருது  வழங்கி சிறப்பித்தார். விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் ஏராளமான  பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here