திருமழிசை, மே. 18 –
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் சிட்கோ சார்பில் புதிய சாலைகள், மழை நீர் வடிகால் கால்வாய், மற்றும் மழைநீர் சேகரிப்பு குட்டை மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை மேம்படுத்தும் பணிகள் என சுமார் ரூ. 6.81 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அப்பணிகள் குறித்து இன்று (18.05.2023) சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திடீரென வருகை தந்து கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவ்வாய்வின் பணிகளின் தரம் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து திட்டமிட்ட காலத்துக்குள் அப்பணிகளை முடித்திடும் படி, அப்போது அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்வின் போது அமைச்சருடன், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய் இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இஆ.ப. பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம், கண்காணிப்பு பொறியாளர் எம்.ஆர். சோமசுந்தரம், சிட்கோ பொறியாளர்கள், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அ.சேகர், தொழிற்பேட்டை கிளை மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.