ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் நடந்த 3 நாள் கருத்தரங்கில் கடல் வாழ் உயிரனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு குறித்த முதல்நாள் வழிப்புணர்வு முகாமும், இரண்டாாம்நாளில் விவசாயிகளுக்கான அறிவியல் குறித்த விழிப்புணர்வு முகாமும் நடந்தது. மூன்றாம் நாளில் மாணவர்கள், விவசாயிகள், கடல்சார் தொழில் செய்யும் மீனவர்கள் என மற்றும் சுய உதவி குழுவினர் என அனைத்து தரப்பினைரையும் ஒருங்கிணைத்து கல்லுாரியின் உயிர் வேதியியல் துறை நிர்வாகிகள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடத்தினர். இந்த கருத்தரங்கில் கல்லுாரியில் பயிலும் உயிர் வேதியியல் துறை மாணவிகள், சுய உதவி குழு பெண்கள், மீனவர்கள், மீனவ கிராம மக்கள் என திராளாக பங்கேற்றனர்.
முப்பெரும் விழாவின் முக்கிய விழாவில் கல்லுாரியின் துணை முதல்வர் மகாலட்சுமி வரவேற்றார். மற்றுமொரு துணை முதல்வர் ஹரிபிரகாஷ் தொடக்க உரையாற்றினார். கவுசானால் கல்லுாரியின் தாளாளர் மற்றும் பொருளாளர் ஜேசுதாஸ் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் துணை முதல்வர் சூசைநாதன் உட்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.
கருத்தரங்கில் பங்கேற்ற மண்டபம் கடல்சார் ரசாயண ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.
பேசியதாவது:
கடல்பாசி தொழிலில் 2020ல் ஒரு லட்சம் பெண்கள் ஈடுபட்டு பொருளாதாரத்தை மேன்படுத்துவர். நீல புரட்சி என்பது ஓரு காலத்தில் மீன் வளமாக இருந்தது. தற்போது மீன்வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. நான் நேரடியாக கண்ட உண்மை மண்டபத்தில் 10 படகு வைத்துள்ள உரிமையாளர் படகு டீசலுக்கு மட்டும் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன் ஆனால் மீன் கிடைத்தது 5 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும்தான் பெருத்த நஷ்டம் என தெரிவித்தார். மீன் தொழிலுக்கு மாற்று தொழில் கடல்பாசி வளர்ப்பு தொழில்தான். தற்போதைய சூழலில் காலையில் எழுந்து பல் துவக்க பயன்படுத்தும் பேஸ்ட் முதல் நாம் உடல் நிலைக்காக பயன்படுத்தும் மாத்திரை வரை அனைத்திலும் கடல்பாசியின் அகர் அடங்கி உள்ளது. எனவே எதிர்காலத்தில் கடல்பாசியின் தேவை அதிகம் அதற்கு தகுந்தாற் போல் மீனவர்கள், பெண்கள் மாற்றி கொள்ள வேண்டும், என்றார்.
விழாவில் துணை பேராசிரியர் பாலகிருஷ்ணன், உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துறை நிர்வாகி மதன் செய்திருந்தார். உதவி பேராசிரியர் சாந்தினி நன்றி கூறினார்.