திருவாரூர், ஜூலை. 29 –

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில், திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இவ் நெடுஞ்சாலையின் பணிக்காக அதன் அருகில் உள்ள அம்மையப்பன், என்கண், காவனூர் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதி  மக்கள் நீண்ட காலமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் சுடு காடு அப்பகுதியில் உள்ளது. மேலும் அதன் வழிப்பாதையில் 40 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மண் எடுத்து தேசிய நெடுஞ்சாலை பணியினை மேற் கொள்வதால், அங்கு மிகப் பெரிய பள்ளங்கள் உருவாகி தண்ணீர் ஊறி கிடக்கக்கூடிய சூழல் நிலவுகிறது.

மேலும் அதுப் போல, அம்மையப்பன் உள்ளிட்ட ஊர்களுக்கு வடிகாலாகவும் அம்மையப்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பல ஊர்களின் குளங்களை நிரப்பக்கூடிய வரத்து பாசன வாய்க்காலையும் முற்றிலுமாக தூர்த்து விட்டதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்பிரச்சினைக் குறித்து துறைச்சார்ந்த நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனம் கொண்டு இப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வுக் காண வேண்டுமென அம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here