சீர்காழி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து இன்று 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் அரவைக்காக 42 ரயில் பெட்டிகளில் அருப்புக்கோட்டை, மற்றும் ராஜபாளையம் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 38 அரசு நெல் கொள் முதல் நிலையங்கள் அமைந்துள்ளது. மேலும் அதன் மூலம் விசாயிகளிடம் இருந்து நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு எடமணல் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கபடுகின்றது.
இந்நிலையில் சேகரித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகளில் ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் அருப்பு கோட்டை பகுதிக்கும், ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் ராஜபாளையம் பகுதிக்கும் அரவைக்காக சீர்காழி இரயில் நிலையத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள அரிசி ஆலைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் அதற்காக 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் நெல் மூட்டைகளை ரயில் பெட்டிகளில் ஏற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. மொத்தம் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொண்ட 50,000 ஆயிரம் நெல் மூட்டைகள் 42 ரயில் பெட்டிகளில் ஏற்றி அனுப்பப்பட்டது.