திருத்துறைப்பூண்டி, ஏப். 04

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம்,  பிச்சன்கோட்டகம் வடபாதி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

மேலும், இவ்விழாவினை முன்னிட்டு கடந்த 27 ஆம் தேதி அவ்வாலயத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி, காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

மேலும் அதனைத்தொடர்ந்து, நாள்தோறும் இரவு மகாபாரத தொடர் கதையானது நடைபெற்றது. மேலும்  திரௌபதி அம்மனுக்கு தினம்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் மாவிளக்கு போடுதல், கஞ்சிவாத்தல் நிகழ்ச்சியுடன் தீமிதிக்கும் பக்தர்கள்  கையில் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் இவ்விழாவினை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து  திரௌபதி அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியுடன் மாலை 6 மணியளவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியை காண்பதற்காக அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here