கூடுவாஞ்சேரி, ஏப். 26 –
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதுடைய ஹைதர் அலி, மேலும் இவர் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலையில் இவருக்கு சொந்தமான பிரியாணி கடை ஒன்று உள்ளது.
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதியன்று மாலை வழக்கம் போல அவர் கடையில் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, 12- நபர்கள் கொண்ட போதைக்கும்பல் பிரியாணி சாப்பிட அக்கடைக்கு வந்துள்ளனர். அப்போது அதில் இருவர் ஒரு குவாட்டர் பிரியாணியை இரண்டாக பிரித்து தருமாறு சப்பளையரிடம் கேட்டுவுள்ளார். அதற்கு அக்கடை ஊழியர் அப்படி தர இயலாது என அப்போது அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அதனைத்தொடர்ந்து அக்கடை உரிமையாளர் ஹைதர் அலியிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து அப்போது நீண்ட வாக்குவாதம் நடைப்பெற்றுள்ளது.
ஒருக் கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் 14 பேர்கள் கொண்ட போதைக்கும்பல் அக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும் அவர்கள் தாக்குதலுக்குள்ளான அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்த ஹைதர் அலியை கடை ஊழியர்கள் மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அச்சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல் நிலைய போலீசார் அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த அச்சம்பவம் தொடர்பான அக்காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் பிரியாணி கடை உரிமையாளரை தாக்கி தப்பிவோடிய 14 பேர்கள் கொண்ட போதைக் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.